SAARC 16 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் சென்றடைந்தார் ராஜபக்ச.
Sunday, April 26, 2010 [கவிநிலா]திம்புவில் 28 ம் 29 ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பூட்டான் சென்றடைந்து ஜனாதிபதி ராஜபக்சவை அந்நாட்டு பிரதமர் ஜிக்மி y தின்லே ( Mr.Jigmi Y.Thinley ) விமான நிலையத்தில் வரவேற்றார். பூட்டான் ராணுவத்தால் ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் அவர் மனைவி சிராந்தி ராஜபக்ச, புதல்வர் நாமல் ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் G.L.பீரிஸ், அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குனவர்தன மற்றும் ராணுவ உயரதிகாரி மோகன் பீரிஸ் ஆகியோரும் வந்துள்ளனர்.
தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, நேபால், பங்களாதேஷ், மாலத்தீவுகள் , பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தொடக்கப்பட்ட இந்த தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு அதன் 25 வது ஆண்டு நிறைவை இந்த திம்பு மாநாட்டில் கொண்டாடுகிறது. ஆப்கானிஸ்தான் மட்டும் 2007 ஆம் ஆண்டு இதில் பிரதிநிதியாக சேர்ந்தது. அதனால் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் வெள்ளிவிழா கொண்டாடும் பெருமை பூட்டான் நாட்டிற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment