Friday, April 30, 2010

G.C.E (O/L) பரீட்சையில் தேசிய மட்டத்தில் 4ம் இடத்தை பெற்ற மாணவன் கௌரவிப்பு.

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியைச் சேர்ந்த வரதராஜன் ரிகேஸ் எனும் மாணவன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனின் பழைய மாணவனான இவரின் திறமையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள் வீசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து அவருக்கு பரிசில் பொருட்களையும் வழங்கினார்.

சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவருக்கு பரிசு வழங்குவதையும் தந்தையார் வரதராஜன் உரையாற்றுவதையும் இல்ல மாணவர்களையும் படங்களில் காணலாம்.




(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com