வட்டுக்கோட்டையில் தொட்ட 'அட்டமத்துச் சனி' முள்ளிவாய்கால் ஊடாக பயணிக்கிறது! - சதா. ஜீ.
நாடு கடந்த 'தமிழீழ அரசு'க்கு அடிக்கல் நாட்டு விழாக்கள் அந்தந்த நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் எங்குதான் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டப்படும் என்ற ஏக்கம் எம்மிடம் மிஞ்சியிருக்கிறது. சரி அந்தந்த நாடுகளில் தமிழீழ அரசுக்கான கட்டிடம் கட்டப்பட்டாலும் முள்ளிவாய்காலில்தான் தலைமையம் கட்டப்படவேண்டும் என்பது எல்லோருடைய அவா! ஏனெனில் தலைவர் சீசி... தமிழீழ தேசியத் தலைவர் கடைசியா உயிரை விட்ட இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம், கம்பி நீட்டினவர் என்று எடுத்துக்கொள்ளலாம் , தலைமறைவானவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம் எது எப்படியோ எல்லோருடைய உயிரை எடுத்தவரின் உயிர் எடுக்கப்பட்ட இடத்தில் சரிசரி உயிரை எடுக்கப்பட்ட இடத்தில்தான் தலைமையம் கட்டப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு கோத்தபாய அனுமதிக்க வேண்டும்!
வடக்கு கிழக்கை இணைக்கிறாரோ இல்லையோ தமிழர்களுக்கு தேசியம் - சுயநிர்ணயம் - சுயாட்சி என்பவற்றை ஜனாதிபதி அனுமதிக்கிறாரோ இல்லையோ, இடம்பெயர்ந்து முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களை மீள் குடியேற்றுகிராரோ இல்லையோ எங்களுக்குத் தேவை முள்ளிவாய்காலில் ஒரு தமிழீழ அரசுக்கான கட்டிடம். அதற்குள் ஆடு மேயுதோ மாடு மேயுதோ! இல்லை பேய்தான் மேயுதோ அதைப்பற்றியெல்லாம் சிங்களவன் கவலைப்படத் தேவையில்லை எங்களுக்குத் தேவை முள்ளிவாய்காலில் ஒரு நாடுகடந்த தமிழீழத்துக்கான தலைமைக் கட்டிடம். அவ்வளவுதான்!
நாடு கடந்த அரசுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது என்பதிலும் பார்க்க காசுபறிக்கும் அல்லது பதுக்கும் கைங்கரியம் புலன்பெயர் நாடுகளில் நடைபெற்றுவருகிறது. அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத சில சில்லறையள் மேலும் சில சில்லறைகளை சம்பாதிக்க இந்த காவடியை தூக்கி தமிழரின் பெயரில் தமிழர்களின் தோழில் சும்துவதற்கு அரும்பாடு பட்டுவருகிறார்கள். இதில் என்ன சுவாரசியம் என்றால் பம்மாத்து பேராசிரியர்களில் இருந்து பக்கா பாதிரியார் வரை இதில் அம்மணமாக நிற்பதுதான். இவர்கள் சிறீலங்காவுக்குப் போகிறார்களோ இல்லையோ சிறிலங்கா உளவுப்பிரிவும் துரோகிகளும் கண்ணுக்கு எண்ணை விட்டுக்கொண்டு காத்திருக்கிறார்களோ இல்லையோ நாம் கண்ணுக்கு பெற்றோலையாவது ஊத்தி பாத்துக்கொண்டிருக்கவேணும். இவர்கள் சில்மிசங்களுக்காக கியூபா எறுற பிளேனை அப்படியே கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிட்டுட வேணும். செய்த பாவங்களுக்கு அதுவே பெரிய புண்ணியமாக அமைந்துவிடும்.
இதில் இன்னுமொரு சுவார்சயமும் இருக்கிறது. 'புலிதேய்ந்து மயிரான மாதிரி' இன்ன இடத்தில் இத்தினையாம் திகதி காசைக்கட்டுங்கோ. ஊருக்கு போகவேணுமா காச கட்டுங்கோ. காசு இல்லையோ கிறடிக் காட்டில காசைக் கட்டுங்கோ. கிறடிக்காட்டிலயும் காசு இல்லையென்றால் கடனுக்கான ஒழுங்குகளைச் செய்துதாறம் என்றெல்லாம் பயமுறுத்தி காசு பறித்த பணப்புலிகள் இன்று 'ஐயா பிச்சைபோடுங்கோ, சாப்பிட வழியில்லை தர்மம் பண்ணுங்கையா' என்று புலன் பெயர்நாடுகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் விளம்பரத்தை ஒட்டிவிட்டு நிற்கிறார்கள். நான் சொல்லவாறது என்னவென்றால் அதிஸ்டலாப சீட்டு குலுக்குக்குகிறார்கள்! விழுந்தால் உயிர்! போனால் மசிர்!
நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில் தமக்கு வாக்களிக்கும்படி பத்திரிகைகளிலும் தமிழ் வர்த்தக நிலையங்களில் விளம்பரங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இன்னபகுதியில் மேற்குப் பக்கமாக நான் நிற்கிறேன் எனக்கு வாக்களிக்கவும் என்றும் கிழக்குப் பக்கமாக நான் நிற்கிறேன் என்று இன்னொருவர் தனக்கு வாக்களிக்கும் படியும் கோரிநிற்கும் பத்திரிகையின் பக்கங்களில் இன்னொரு பக்கத்தில் 'என்னைத் தேர்வு செய்யுங்கள்' என்றிருந்துது. இவர் எந்தப்பக்கத்திலிருக்கிறார் என்று பார்த்தால் அவர் வீடு வாங்க, விற்பதற்கு தன்னை தெரிவு செய்யும்படி கோரி நிற்கிறார். தமிழனுக்கு புத்தியில்லை என்று சொல்பவனை செருப்பால அடிக்கவேணும்!
அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத இந்த விசருகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யமுடியும்? சரி தேர்தலில் தோந்தெடுக்கப்படப்போவதெல்லாம் மொள்ளமாரியும் முடிச்சவிக்கியும்தான்! இன்னுமொரு சுவார்சயம் அண்மையில் இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஏன் சர்வதேசங்களில் நடைபெறும் தேர்தல்களில் தேவைப்படும் பிரதிநிதிகளுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கும்போதுதான் போட்டியே நடைபெறும். ஆனால் இந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் எத்தனைபேர் தேவை எத்தனைபேர் போட்டிபோடுகிறார்கள் என்ற சிக்கலான கேள்வியெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. 22 உறுப்பினர்களுக்கு ஐந்துபேர் போட்டிபோடுகிறார்கள் என்ற விகிதத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த லட்சணத்தில் 'தேர்தல்' என்று வேறு அறிவித்துவிட்டார்கள் அறிவாளிகள்!
இதில் தெரிவு செய்யப்படவிருப்பவர்கள் அனைவருமே அடிமட்ட முனாக்கள்தான். இவர்கள் அங்கு போய் என்னத்த செய்யப்போகிறார்கள்? அனைவருமே இல்லாத ஊருக்கு வழி சொல்லப்போகிறார்கள். இதில் நல்லவழி - கெட்டவழி என்று எதுதான் இருக்கும்? எனக்கென்னமோ காட்டுக்குள்ள சந்திரனைப் பார்த்து ஓநாய்கள் ஊழையிடுவதைப்போலத்தான் இவர்களும் ஒரிரு நாள் வாடகைக்கெடுக்கும் கட்டிடத்தில் இருந்துகொண்டு! 'துஷ்டனைக் கண்டால் தூரவிலகு' என்று சர்வதேசத்துக்கு நாங்கள்தானே போதித்தோம். இப்ப சர்வதேசம் எங்களைக் கண்டு பிடரில பிறங்கால் அடிபட ஓடுறான். இதில சர்வதேசத்திடம் கோரிக்கையை எப்படி முன்வைக்கிறது?
சுவார்ஷயம் தேவையென்றால் நாடுகடந்த தமிழீழ அரசு வெடிகளை கொழுத்தி கூத்தமைப்பின் காலுக்கடியில போட்டுவிடவேணும். ஆவனவன் ஜீன்ஸ் பான்டோட இருக்கிறாங்கள். சண்டியர் சம்பந்தர், 'மாமா' சேனாதிராஜா போன்றோர்தான் பரிதாபமாக இருக்கும்!
இலண்டனில் இயங்கும் பல்மொழி வானொலி ஒலிபரப்பாகும் அரை மணித்தியாலத்தில் அவிழ்த்துப்போட்டு அம்மணமா நிற்கிது! கூத்தமைப்பிடம் நாடுகடந்ததைப் பற்றி பிடுங்க வக்கில்லாட்டாலும் பறவாயில்லை இப்பொழுதெல்லாம் புலிகளின் ஆஸ்தான எழுத்தாளர்கள், பிரச்சாரகர்களிடம் எல்லாம் 'ஆய்வாளர்கள்' என்று சொல்லிப்போட்டு செவ்வி எடுக்கினம்! என்ன கொடுமைசார்! இலங்கையில் இயங்கும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் துண்டைவிரித்து சோரம் போகுதென்றால் இவர்களுக்கென்ன தேவையிருக்கிறது? ஸ்ரேலிங் பவுண் என்ன சும்மாவா? கொக்ககாவா?
நாடு கடந்த தமிழீழ அரசுக்குப் போட்டி போடுபவர்கள் வாழ்க்கையில் இலங்கைப் பக்கம் தலைவைத்துப் படுக்கப்போவதில்லை. அதேபோலத்தானா வாக்களிப்பவர்களும்? அதற்குத்தான் வாக்களிப்பு நிலையங்களில் புகைப்படம் எடுப்பதோ வீடியோ எடுப்பதோ தடைசெய்திருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் வக்களிப்பவர்கள் வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் கள்ளவோட்டுப் போடுவதைத் தடுப்பதற்கு கைக்கு மை பூசப்படுவதுடன், முக்கியமாக கணனியில் பெயர் விபரங்கள் பதியப்படும். இந்த விபரங்களைச் சுடுவது ஒன்றும் கடினமல்ல இலங்கை உளவுப்பிரிவுக்கு. இது வில்லங்கத்தை கூடவே கூட்டிக்கொண்டு திரியிறமாதிரி. இப்பெல்லாம் பெயர், விபரம், படம் எல்லாம் தேவையில்லை. கைவிரல் அடையாளமே சரித்திரத்தைச் சொல்லுமளவுக்கு தொழிநுட்பம் வளர்ந்திருக்கிறது. அது இலங்கை உளவுப் பிரிவிடம் தாராளமாகவே இருக்கிறது.
மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கப்படமாட்டாது என்று அறிவித்தாலும் இலண்டனில் வாக்காளர் வாக்களிப்பதை வீடியோ காட்சியாக நீங்கள் இன்ரநெட்டில் காணலாம். இத்துணுண்டு கமராவில நித்தியானந்தரையே நிர்க்கதியாக்கியவர்கள் அதுவும் பூட்டிய அறைக்குள்! நீங்கள் பப்பிளிக்கா காரில பஸ்ஸில போயா வாக்களிக்கப்போகிறீர்கள்?
எனவேதான் போட்டிபோடுபவர்கள் மறந்தும் இலங்கைப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளில் சுருட்டிக்கொண்டதை வைத்துக்கொண்டே ராஜபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் இலங்கைப் பக்கம் வாழ்நாளில் போகப்போவதில்லை. பெரும்பாலான சொந்தபந்தங்கள் வெளிநாடுகளில். எனவே இவர்களுக்கு அங்கு வேலையுமில்லை. அதேவேளை ஏற்கனவே இவர்களில் சிலர் இலங்கைக்குப் போகமுடியாத நிலை. அதாவது 'கிரிமினல் ரக்கோட்' இருக்கும். மற்றம் இதில் அனுபவம்வாய்ந்த வயதானவர்கள் ஒருவரும் போட்டிபோடவில்லை. அவர்கள் ஊரில போய் உசிர விடவேணும் என்ற கனவுடனே இன்றும் இருக்கிறார்கள்.
ஒரு வேலைக்கு இரண்டு வேலையடிக்கும் வாக்களிப்போர், வாழ்க்கையின் சந்தடிக்குள்ளும் நேர்மையாக எப்படி வாழ பழகிக்கொண்டீர்களோ அதேபோல நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். தப்பித்தவறி இலங்கைக்குப் போனால் ஏன் வாக்களித்தீர்கள்? என்று கேட்டால் 'மறந்துபோனனான்' என்று கதைவிடுறத இலங்கை இமிக்கிறன் ஓவ்வீசர் நம்பலாம்! கோத்தபாய நம்புவானோ? சாமிய நம்பலாம் இந்த ஆசாமியள நம்பலாமோ! சுனாமில சொந்தபந்தங்கள இழந்து அனாதைகளாக அந்தரித்த மக்களுக்கு சேத்த பணத்தில் கைவைச்சவங்கள், விடுதலைப் போராட்டமெண்டு அங்க சின்னஞ்சிறுசிகள் சாக இஞ்ச போராட்டத்துக்கு காசு சேர்த்து 20 வீதம் கொமிசன் எடுத்துக்கொண்டவர்கள் - சேத்த காசிலையும் கொஞ்சத்த அமுக்கியவர்கள் இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன. இவர்களா இலங்கைத் தூதரகம் விட்டெறியும் டொலருக்கு வாக்களிக்கும் உங்கள் தகவல்களை கொடுக்கமாட்டார்கள்?
'குட்டைக்கண்ணன் என்றொருத்தன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான். அவனைக் கண்டால் ஊரார் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். ஊரில் உள்ள அனைவரிடம் கடன் பெற்றிருந்தான். திருப்பிக் கேட்டால் இவன் தனது நடிப்பாற்றலால் என்பதிலும் பொய்களால் கேட்டவரிடம் இன்னும் கொஞ்சப் பணத்தை கறந்துவிடுவான். யாரும் ஒற்றுமையாக இருப்பது இவனால் பொறுக்க முடியாது. சண்டைகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்திவிடுவான். எல்லோரிடமும் எரிச்சலும் பொறாமையையும் தந்திரமாக புகுத்திவிடுவான். இவனால் அந்தக் கிராமம் நல்லா நொந்துபோனது. இவன் எங்காவது போய்தொலைய மாட்டானா என்று ஏங்கிய கிராம மக்கள் இவன் செத்துத் தொலையமாட்டானா? இவன்ர தலையில இடி இறங்காட்டிலும் சுப்பசொனிக் குண்டைப்போடாதா என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இதைக் கேள்வியுற்ற குட்டைக் கண்ணன் மிகவும் மனம் வருந்தினான். இதனால் நோயுற்றான். மரணப்படுக்கைளில் விழுந்தான். மரணமானான். செத்துத் தொலைந்தானே என்றிருந்த கிராமத்தவர்களுக்கு ஒரு கடிதத்தை ஏற்கனவே அவன் எழுதியிருந்தான் 'எனதருமை ஊரவர்களே நான் செய்த பாவத்துக்கு பிராயச் சித்தம் செய்ய விரும்புகிறேன். நான் உங்களை கொடுமைப்படுத்திவிட்டேன், துன்புறுத்தினேன். எனவே நான் செய்த பாவத்தை துடைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் செத்தாப்பிறகு எனது இறந்த உடலை நீங்கள் அனைவரும் உங்களது செருப்பால் அடிக்கவேண்டும். அவ்வாறு யாராவது ஒருவர்கூட அடிக்காவிட்டால் எனது ஆத்மா சாந்தியடையாது இந்த ஊரையே சுற்றிச்சுற்றி வரும்' என்றிருந்தது. இவனே அந்தர் கொடுமை இவனது ஆவியா? ஊரவர்கள் அனைவரும் முந்தியடித்துக்கொண்டு கியூவில் நின்று அடித்தார்கள்.
அதேவேளை பொலிசிலும் குட்டைக்கண்ணன் ஒரு புகாரைக் கொடுத்துவிட்டுத்தான் செத்தான். 'நான் செத்தால் என் இறந்த உடலை ஊரவர்கள் செருப்பால் அடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்' என்பதே அது. குட்டைக் கண்ணனின் இறந்த உடலை ஊரவர்கள் திரண்டு அடிப்பதைக் கேள்வியுற்ற பொலிசார் ஊரவர்கள் அனைவரையும் அள்ளிக்கொண்டுபோய் பொலிஸ்ரேசனில் வைத்து ஆசைதீர மொங்கினார்கள்'
இதைத்தான் சொல்வது 'செத்தும் கெடுத்தான் குட்டைக் கண்ணன்'
'நீர் யாரைச் சொல்லுறீர்?'
'குட்டைக் கண்ணனை'
'குட்டைக் கண்ணனென்ற யாரைச் சொல்லுறீர்?'
'குட்டை...'
'டே.. டே.. நிப்பாட்டுறா!'
0 comments :
Post a Comment