ஆட்பதிவு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது:
ஆட்பதிவுத் திணைக்களத்தினை பாதுபாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல அடையாள அட்டைகள் மோசடிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இவ்வாறான அடையாள அட்டை மோசடிகளுக்கு ஆட்பதிவு திணைக்கள உத்தியோகித்தர்கள் துணைபோயுள்ளமையும் வெளிவந்துள்ளது.
எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அடையாள அட்டை மோசடிகளை தடுப்பதற்காகவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment