பிரதமராக டி.எம் ஜெயரத்ன பதவியேற்கின்றார்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 14 வது பிரதமராக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் முத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டி.எம் ஜெயரத்தின அவர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரதமர் பதவிக்காக முன்னாள் பிரதமர் ரத்னசிறி, பசில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன போன்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சக்திமிக்க உறுப்பினர்களிடையே பெரும் போட்டி நிலவி வந்த நிலையில் இவ்நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் இன்று பிற்பகல் அலறி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment