பாராளுமன்றம் கூடியது : சாமல் ராஜபக்ச சபாநாயகராக தெரிவு.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கான 7 வது பாராளுமன்றம் இன்று காலை திட்டமிட்டிருந்தபடி கூடியது. சபாநாயகராக சாமல் ராஜபக்ச ஏகமனதாக தெரியவு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகரின் பெயரை பிரதமர் டிஎம். ஜெயரத்தின முன்மொழிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரியா வழிமொழிந்தார்.
பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜெயரத்ன அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகரது பெயர் முன்னாள் பிரதம மந்திரி ரத்னசிறி விக்ரமநாயக்கவால் முன்மொழியப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ ஜோன் அமரதுங்கவினால் வழிமொழியப்பட்டது.
நாடாளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகரை பிரதமமந்திரி டிஎம் ஜெயரத்னவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரியவும் ஆசனத்திற்கு அழைத்துச் செல்வதை படத்தில் காண்கின்றீர்கள்.
0 comments :
Post a Comment