வீரவன்சவிற்கு வாக்கில்லை. அவரால் எம்பியாக முடியுமா? அத்தநாயக்க.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஜேவிபியின் முன்னாள் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவிற்கு இலங்கையில் எங்கும் வாக்கில்லை எனவும் முடிந்தால் அவருக்கு வாக்கு உண்டென நிருபித்துக்காட்டட்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெனரல் பொன்சேகாவின் பெயர் வாக்காளர் இடாப்பில் இல்லை என்ற விடயம் கடந்த ஜனாதிபதி தேர்தல் அன்று தெரியவந்தபோது, வாக்குரிமை இல்லாத ஒருவருக்கு வாக்களிப்பதில் எந்ந பயனும் இல்லை என உயர்ந்த கூரைமீதிருந்து ஒலமிட்டவர் வீரவன்ச. இன்று அதே வசனத்தை நாம் கூறுகின்றோம் வாக்குரிமை இல்லாத வீரவன்சவிற்கு வாக்களிப்பதால் எவ்வித பலனுமில்லை. வாக்குரிமை இல்லாத ஒருவாரால் பாராளுமன்றம் செல்லமுடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment