விமான விபத்தில் பலியான போலந்து அதிபர் உடல் மீட்பு
ரஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியான போலந்து அதிபர் லெக்சி கன்ஸ்கியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டு அதிபர் லெக்கிசன்ஸ்கி சென்ற விமானம் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் நேற்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிபர் லெக்சி கன்ஸ்கி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட விமானத்தில் பயணம் செய்த 97 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இநிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் சென்றபோது, விமானம் விழுந்து கிடந்த இடத்தில் அனைவருடைய உடல்களும் சிதறி கிடந்தன.அடையாளம் காண முடி யாத அளவிற்கு பல உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன.
இதனால் மீட்புக் குழுவினர் அனைத்து உடல்களையும் சேகரித்து அவற்றை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அதில் அதிபர் லெக்க சின்ஸ்கி உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் அங்கிருந்து தனி இடத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.அவருடைய மனைவி உடல் இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே லெக்கிசன்ஸ்கி உடலை உடனடியாக போலந்து கொண்டு செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment