உங்களிடம் தெரிவிக்குமாறு ஜெனரல் சில விடயங்களை கூறியுள்ளார். அனோமா
டிஎன்ஏ யிலிருந்து அதிக உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவதன் முலம் மாத்திரமே ஜெனரல் பொன்சேகாவை மீட்க முடியும் என அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். டிஎன்ஏ தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் பிரச்சாரங்களுக்கான இறுதி நாள் இன்று , ஜெனரல் பொன்சேகா உங்களுக்கு தெரிவிக்குமாறு என்னிடம் சில விடயங்களை கூறியுள்ளார். ஜெனரலை விடுவித்துக்கொள்வதற்காக இன்று உங்களிடம் பலர் வாக்கு கேட்கின்றனர். ஆனால் ஜெனரல் வெற்றிக்கிண்ணச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அவரை விடுவிக்கவேண்டும் என கருதும் உங்கள் அனைவரையும் வெற்றிக் கிண்ணச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டியுள்ளார். அவரது தலைமையிலான வெற்றிக்கிண்ணச் சின்னத்திலிருந்து குறிப்பிடத்தக்களவு தொகை உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றால் அவரை விடுதலை செய்யமுடியும். அதிகப்படியான உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று பாராளுமன்றத்தில் பலமான அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்பட்டால் மாத்திரமே அவரை விடுவிக்க முடியும் என அவர் கருதுகின்றார் என அனோமா மேலும் கூறினார்.
அத்துடன் ஜெனரல் பொன்சேகாவின் உடல் நலன்களை கவனிப்பதற்கென விசேட வைத்தியர்கள் எந்த நேரம் விஜயம் செய்வதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நான் மேஜர் ஜெனரல் பிரசாட் சமரசிங்கவிடம் அப்பட்டமான பொய்களை கூறவேண்டாம் என வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment