முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பமாகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக மூடியிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பமாகின்றது. இந்த தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டானில் உள்ள அரசுக்கு சொந்தமான இத் தொழிற்சாலை வடக்கு பகுதியின் முக்கிய தொழிற்சாலையாக இருந்ததாகவும் இந்த பகுதியில் விடுதலைபுலிகளின் செயல்பாட்டால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் மேலும் கூறிய அவர் இந்த தொழிற்சாலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் அதிக அளவு முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தேசிய சமாதான கழகம் இணைந்து சைக்கிள் பழுது பார்க்கும் பணியை துவங்கியுள்ளதாகவும் , சேகரித்து வைக்கப்பட்டுள்ள சைக்கிள்களில் சுமார் 300 சைக்கிகள் திருத்தப்பட்டு துணுக்காய் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்ற தகவலையும் அவர் மேலும் வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment