இலங்கைத் தமிழர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதில் சிக்கல்
இலங்கை அரசு விதித்துள்ள புதிய நிபந்தனைகளால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான இணைப்பு காரியாலயமே நிதி உதவிகளை நிர்வாகம் செய்து வந்துள்ளது.
தற்போதயை முறைமையின் கீழ் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தலைமையிலான விசேட செயலணியின் ஊடாக நிதி செலவிடப்பட வேண்டும் என இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்வதில் உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உடன்படவில்லை எனவும், இதனால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பெற்றுக் கொள்ளும் நிதியுதவிகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனால் பெருமளவு அப்பாவி தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
0 comments :
Post a Comment