Thursday, April 29, 2010

கனடாவில் நாடுகடந்த தமிழத்திற்கான வேட்பாளர் ஈசன் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

பிரபாகரனின் அழிவின் பின்னர் பல கூறுகளாக பிரிந்து நின்ற புலிப்பினாமிகள், தற்போது தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கில் ஒன்றிணைந்துள்ளதுடன், நாடுகடந்த தமிழீழம் எனும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக நிர்க்கதியாக்ககூடிய முன்னெடுப்பொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்பொருட்டு நாடைமுறைச் சாத்தியமற்ற நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தல் ஒன்று புலம்பெயர் தேசத்திலே நடாத்தப்படவுள்ளது. இப் பாராளுமன்றுக்காக கனடா ரொறண்டோவில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர். இவ் 5 பிரதிநிதித்துவத்துக்காக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவ் 11 வேட்பாளர்களில் ஒருவரான தெய்வேந்திரம் குலசேகரம் பிள்ளை (ஈசன்) என்பவர் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த இவர் புளொட் அமைப்பை சேர்ந்தவராகும். புளொட்டிலிருந்து நோர்வேக்கு ஒடி அங்கு ஓரிரு ஆண்டுகள் இருந்து விட்டு கனடாவிற்கு சென்று ராம் சுந்தர் எனும் போலிப்பெயரில் தன்னை கனடாவில் பதிவு செய்து கொண்ட அவர், தற்போது கனடாவில் ஈசன் எனும் பெயரில் வலம் வருகின்றார்.

பல வருடங்களாக புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ஈசன் கடந்த ஓரிரு வருடங்களாக புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்ததுடன் நிதிவசூலிப்பிலும் நேரடியாக இறங்கியிருந்தார்.

நாடுகடந்த பாராளுமன்றுக்கான போலித் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் அவர் தனது தேர்தல் பிரச்சார வேலைகளுக்கென ஏகப்பட்ட நிதியை மக்களிடம் வசூலித்து வருவதாக தெரியவருகின்றது. இவ் நிதிவசூலிப்பு தொடர்பாக ஸ்காப்புறு வில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் பேசப்பட்டபோது தான் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் எனவும் தன்னிடம் கேள்வி கேட்பதற்கு எவருக்கும் அருகதை கிடையாது எனவும் அங்கிருந்தவர்களுக்கு கூறியபோது, அவ்விடத்திலிருந்த உதயன் என்ற பெயருடைய கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் புலிகளியக்க உறுப்பினரான இளைஞன் ஒருவன் நீர் எத்தனையாம் ஆண்டு புளொட் இயக்கத்தில் இணைந்து கொண்டாய் என்பதும், கடந்த காலத்தில் உமது செயற்பாடுகள் யாது எனவும், இப்போது புலிகளுடன் பணத்திற்காகவே இணைந்துள்ளாய் என்பதும் எமக்கு தெரிந்;த விடயமே எனக் கூறி ஈசனை நையப்புடைத் துள்ளார்.

இவருக்கு பின்னணியில் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த கமல் என்பவர் இருப்பதாக தெரியவருவதுடன், குறிப்பிட்ட உதயன் எனும் இளைஞன் தவம், ரட்ணம் எனும் ஈசனின் எடுபிடிகள் இருவர் உட்பட்ட குழுவொன்றால் பின்னர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பிரபாகரனின் மனைவியின் சொந்தக்காரனான தமிழ் என்பரே ரொறன்டோ பிரதேசத்தில் புலிகளுக்கு பொறுப்பாக இருப்பதாகவும் இவர் நாடுகடந்த தமிழீழத்திற்கு எதிராக வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தேர்தலை நடத்தியிருந்தார். ஆனால் அவ்விடயம் உருத்திரகுமார் கும்பலால் தோற்கடிக்கப்பட்டபோது சந்தர்பத்திற்காக நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தலில் தமது வேட்பாளர்கள் ஐவரை நிறுத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் குறிப்பிட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தேர்தல் பிரச்சாரங்களுக்காக தமது புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரித்துள்ளபோதும், சிலர் தமது புகைப்படங்களை வெளிவிடாது பெயர்களை மாத்திரம் வெளிவிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com