ஒபாமாவை குரங்கு என்று கூறி ஆஸி. அரசியல்வாதி அனுப்பிய ட்விட்டரால் சர்ச்சை.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை குரங்கு என்று விமர்சித்து ஆஸ்திரேலியா வின் குவீன்ஸ்லாந்து விடுதலை தேசியக் கட்சியின் நிக் சோவ்டன் என்ற அரசியல்வாதி அனுப்பிய ட்விட்டர் செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இனவெறி விமர்சனங்களுக்குப் பெயர் போனவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம். கிரிக்கெட்டில் இது சர்வ சாதாரணமாக உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என்று விமர்சித்து இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல்வாதி நிக் சோவ்டன். அங்குள்ள குவீன்ஸ்லாந்து தேசிய விடுதலைக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர் இந்த சோவ்டன். இவர் தனது ட்விட்டர் தளத்தில், ஒபாமாவை விமர்சித்து எழுதியுள்ளார்.
பாரக் ஒபாமாவின் பேட்டி ஏபிசி டிவியில் ஒளிபரப்பானது. ஒபாமாவை கெர்ரி ஓ பிரையன் என்ற நிருபர் பேட்டி கண்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி எழுதினார் சோவ்டன்.
ஒரு குரங்கை பேட்டி எடுக்க வேண்டுமானால் படகை எடுத்துக் கொண்டு டரோங்கோவுக்குப் போயிருக்கலாம். அதை விட்டு விட்டு ஏன் கெர்ரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் சோவ்டன்.
இன்னொரு செய்தியில், நான் குரங்கைப் பார்க்க விரும்பினால் வன விலங்குகள் குறித்த சானலைப் பார்த்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.
இந்த சோவ்டனுக்கு வயது வெறும் 22 தான். கிரிபித் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். இவர் இப்படி இனவெறியுடன் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அவரது கட்சிக்குள் பலத்த குரல் கிளம்பியுள்ளது. இதையடுத்து சோவ்டன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
தனது ட்விட்டர் செய்தி குறித்து விளக்கியுள்ளார் சோவ்டன். அவர் கூறுகையில், அது ஒரு ஜோக். என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்றார் சோவ்டன்.
0 comments :
Post a Comment