Wednesday, April 14, 2010

செஞ்சிலுவை சங்கம் அவசர கோரிக்கை

இலங்கை செஞ்சிலுவை சங்கமும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்றும் செம்பிறை சங்கமும் இணைந்து 25000 யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ அவசர உதவித்தொகையாக 3.4 மில்லியன் அமெரிக்க டொலர் (2.5 மில்லியன் யூரோ) வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

பெருமளவான மக்கள் இடம்பெயரந்தவர்களாவர் இவர்களில் 2004 ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு தமது வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதற்கு 5.4 மில்லியன் டொலர் நிதி உதவி தேவைப்படுவதாகவும் தெரியவருகிறது.

இவ் உதவித் தொகையானது 200 வீடுகளை கட்டுவதற்கும் 950 வீடுகளை மீள புனரமைப்பதற்கும் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தை அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டியெழுப்புவதற்கும் தேவையாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் 75 வீதமான மக்களின் வீடுகள் திருத்தப்பட் வெண்டும் எனவும் 25 வீதமானவை மீள அமைக்கப்படவேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கல்வி கற்கும் குழந்தைகள் நிலத்தில் இருந்து கற்பதாகவும் வகுப்பறைகளுக்கு கூரைகள் காணப்படவில்லை எனவும் கதிரை மேசைகள் இல்லை எனவும் வீடுகளுக்கு திரும்பிய மக்கள் வீடுகளை திருத்தி வாழ தொடங்கியுள்ளதாகவும் எனினும் பெருமளவு மக்கள் இன்னமும் கூடாரங்களில் வாழ்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 2010 மார்ச் மாதமளவில் மட்டும் 93 000 மக்கள் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் 185 000 மக்கள் தமது வீடுகளுக்கு செல்ல தொடங்கியிருப்பதாகவும் வாழ்வாதார கட்டமைப்புகள் சிதைக்கப்பட்ட அம்மக்களிற்கு சுகாதார வசதிகள்,வாழ்வாதாரங்கள், அடிப்படை வசதிகள் என்பன மீளமைக்கப்படவேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com