புத்தள மாவட்ட ஐ.தே.மு வேட்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை.
புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ள பா.உ ரங்கபண்டார சகவேட்பாளர் ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரங்கபண்டார மீது தாக்குதல் மேற்கொண்ட சகவேட்பாளரான சாந்த அபயசேகரமீது ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என கட்சியின் உப தலைவர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் சாந்த அபயசேகர உட்பட அவரது ஆதரவாளர்கள் ஐவர் மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிக்சை பெற்றுவரும் ரங்கபண்டார மேலும் இரு சந்திரசிகிச்சைகட்கு உட்படுத்துப்படுவார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரங்கபண்டாரவின் மேலதிக சிகிச்சைகளுக்கு உதவ ஜனாதிபதி முன்வந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கட்சிக்காரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எதுவாயினும் சம்பந்தப்பட்ட இரு தரப்பில் ஒரு தரப்பினர் கட்சியிலிருந்து வெளியேறுவர் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment