நித்யானந்தர் கைது
இமாச்சல பிரதேசம் ஆர்க்கி என்ற இடத்தில் பதுங்கி இருந்த நித்யானந்தரை பெங்களுர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிடதியில் நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்தர் நடிகையுடன் தனது ஆஸ்ரம அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது.
இதை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் தமிழகம், கர்நாடகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நித்யானந்தர் தலைமறைவானார். அவரை பிடிக்க கர்நாடக காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் ஆர்க்கி என்ற இடத்தில் பதுங்கி இருந்த நித்யானந்தரை பெங்களூரு காவல்துறையினர் இன்று பிற்பகலில் கைது செய்துள்ளனர்.
பெங்காளூர் கொண்டு செல்லப்படவுள்ள நித்யானந்தர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
0 comments :
Post a Comment