தென் கொரியாவுக்கு வட கொரியா எச்சரிக்கை!
எங்கள் நாட்டின் மீது படை எடுத்து வர முயற்சி செய்தாலோ எங்களுடைய எல்லையில் 0.001 மில்லி மீட்டர் அளவுக்கு ஆக்கிரமித்தாலோ அதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டோம். அணு குண்டு உள்பட எந்தவித ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்று வட கொரிய இராணுவத் தலைமை தளபதி ரியாங் ஹோ எச்சரித்திருக்கிறார்.
இந்த எச்சரிக்கை தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா வட கொரியாவுக்கு ஆதரவு அளிக்கிறது. அமெரிக்க ஆதரவு தென் கொரியாவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் இராணுவத்துக்குக் கொரிய மக்கள் சேனை (கே.பி.ஏ.) என்று பெயர். இது உருவாக்கப்பட்டு 78 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நடைபெற்ற மிகப்பெரிய அணிவகுப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை பேசுகையில் அமெரிக்காவையும் தென் கொரியாவையம் அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் லீ மியுங் பாக் தலைமையிலான தென் கொரிய அரசு எதிரிகளாலும் துரோகிகளாலும் நிரம்பி வழிகிறது என்று வசைபாடிய அவர், இரு கொரிய நாடுகளும் இணைய முடியாதபடிக்குத் தடுப்பது தென் கொரிய அதிபர்தான் என்றார்.
தென் கொரியாவின் கடலோரக் காவல் படையின் கப்பலை வட கொரிய இராணுவம் மார்ச் 26ஆம் தேதி வழிமறித்து கடலில் மூழ்கடித்தது. அதனால் தென் கொரியாவைச் சேர்ந்த 40 மாலுமிகள் இறந்தனர். 6 பேரைக் காணவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment