ஆழும் கட்சியினுள் தொடரும் உள்வீட்டு மோதல்கள். புத்தளத்தில் ஒருவர் கொலை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுள் விருப்பு வாக்குகளுக்காக இடம்பெற்றுவந்த உள்வீட்டு மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள காலம்சென்ற அமைச்சர் டி.எம் தசநாயக்கவின் மனைவியான இந்திராணி தசநாயக்கவின் ஆதரவாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள ஆனமடுவப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் தேர்தல் காலங்களில் திருமதி இந்திராணி தஸநாயக்க சார்பாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment