பெனாசிர் கொலை: ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை இன்று வெளியீடு.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை, கடந்த மார்ச் 30 ஆம் தேதியன்றே வெளியிடப்படுவதாக இருந்தது.
ஆனால் அதனை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கேட்டுக்கொண்டதன் பேரில் அதனை வெளியிடுவதை, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் அந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக ஐ.நா. பேச்சாளர் மார்டின் நெஸ்ரிகி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment