கையடக்க தொலைபேசியைத் திருடிய பொலிஸ் பரிசோதகர் கைது .
கையடக்க தொலைபேசி ஒன்றை திருடி அதை பெண் ஒருவருக்கு பரிசளித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விசேட கடமையின் நிமிர்த்தம் சிலாபம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரது தொலைபேசி காணமல் போயுள்ளது. உதவி பொலிஸ் பரிசோதகர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தொலைபேசி பெண் ஒருவரால் பாவிக்கப்படுவது நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக கண்டறியப்பட்டதுடன், பெண் கைது செய்யப்பட்டார்.
பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை விசாரித்த போது, தனக்கு குறிப்பிட்ட தொலைபேசி மேற்படி பொலிஸ் பரிசோதகரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் தேர்தல் காலங்களில் தொலைபேசியை தொலைத்த உப பொலிஸ் பரிசோதகருடன் ஒரே அறையில் தங்கியிருந்தவர் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment