அந்தர் பல்டி ஆரம்பம் : தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னணியில்.
எழாவது பாராளுமன்றுக்கான முதல் அமர்வு இன்று இடம்பெற்று முடிந்துள்ளது. இப்பாராளுமன்றில் ஆழும் கட்சி 144 ஆசனங்களைப் கொண்டுள்ளதுடன், அரசியல் யாப்பில் மாற்றங்களையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்றில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களுக்காக ஆழும் கட்சிக்கு மேலும் 6 ஆசனங்கள் தேவைக்படுகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியூடாக நுவரேலிய மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ள பளனி திகாம்பரம் மற்றும் கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ள மனோகணேசன் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் முன்னணியில் பங்கு கட்சியான மனோ கணேசன் தலைமையிலான ஜனாநாயக மக்கள் கூட்டணிக்கு தேசியப் பட்டியலில் இடம் ஒதுக்கி கொடுக்கப்படாததை தொடர்ந்தே இப்பிளவு ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment