Wednesday, April 28, 2010

ஒபாமா-தலாய்லாமா பிரபலமான தலைவர்கள்

பிரான்ஸ் நாட்டில் உள்ள 2 நிறுவனங்கள் உலகிலேயே மிக பிரபலமான தலைவர் யார் என ஓட்டெடுப்பு நடத்தின. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகளில் இண்டர்நெட் மூலம் இது நடத்தப்பட்டது.
மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல்) 12ஆம் தேதி வரை இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 16 வயது முதல் 64 வயது வரையிலான 6,135 பேர் ஓட்டு போட்டனர். இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தையும், திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா 2-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஒபாமா 77 சதவீத ஓட்டுகளும், தலாய்லாமா 75 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 62 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளார். போப் ஆண்டவர் 16-வது பெனட்டிக்டுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இவருக்கு 36 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 54 சதவீத ஓட்டுகளுடன் 4-வது இடத்தையும், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆகியோர் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் 37 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர். (டிஎன்எஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com