Saturday, April 17, 2010

அமெரிக்க-இலங்கை கடற்படையினர் திருமலையில் கூட்டுப்பயிற்சி.

அமெரிக்க கடற்படையும் சிறீலங்கா இராணுவமும் இணைந்து திருகோணமலையில் கூட்டு இராணுவப்பயிற்சியில ஈடுபடவுள்ளதாக வெள்ளிக்கிழமை அமெரிக்கதூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடர்முகாமைத்துவம், மக்கள்பாதுகாப்பு மற்றும் சத்துணவு அமைச்சு போன்றவற்றில் இருந்து பொதுமக்களும் உள்ளடக்கப்படுவதாகவும் இதில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது அவசரகால வைத்திய சிகிச்சை, வெடிக்காமல் காணப்படும் வெடிபொருட்களை பாதுப்பாக துப்பரவு செய்தல், சிகிச்சைகளின் பின் உளநல வேலைத்திட்டங்கள், சுகாதார நடவடிக்கை போன்ற விடயங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இக் கூட்டு நடவடிக்கையில் அமெரிக்க மற்றும் சிறீலங்கா இராணுவத்தினர், மற்றும் சுகாதார சேசையினர் 27 கிராமங்களை சேர்ந்த 700 குடும்பங்களை சென்று பார்கவுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

இதுதொடர்பில் லெப்பிரன்ட் கேணல் லாறி சிமித் கருத்து தெரிவிக்கையில் இக்கூட்டு நடவடிக்கயில் மூலம் இருதரப்பு இராணுவத்தினரும் தமக்கிடையே இடர்காலங்களில் எவ்வாறு மனிதாபிமான சிக்கல்களை எதிர்கொள்வது என பகிர்ந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com