சிவாஜிலிங்கம் இந்திய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றாராம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் மண்கவ்வியவருமான சிவாஜிலிங்கம் இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது அவரை நாட்டினுள் அனுமதிக்காத இந்திய குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினர் கொழும்புக்கான அடுத்த விமானத்தில் பொதி செய்து அனுப்பி வைத்தனர்.
இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டை கொண்டுள்ள தன்னை இந்தியா அவமதித்துள்ளதாக தெரிவிக்கும் சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை காட்டுமுகமாக இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. தனக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள ராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு இன்னும் சுமார் ஒருவாரங்கள் அளவில் செல்லுபடியானதாக உள்ளபோதும் இந்திய அதிகாரிகள் நாட்டினுள் அனுமதிக்கவில்லை என சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment