இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக டெல்லியில் மாநாடு.
புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற இனப்படுகொலை , மற்றம் யுத்தமுறை மீறல்கள் தொடர்பான கருத்தரங்க மாநாடு டெல்லியில் நாளை நடக்க உள்ளது. டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மற்றும் 'டூப்லின்' அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
அயர்லாந்தில் உள்ள டூப்ளின் தீர்ப்பாயம் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து இந்த தீர்ப்பாயம் விரிவாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பான கருத்தரங்க மாநாட்டை இத்தீர்ப்பாயம் டெல்லியில் நாளை நடத்துகிறது. இதில் உயர்நீதிமன்ற முன்னாள நீதிபதி ராஜிந்தர் சச்சார், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் கிருஷ்ணையர், அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ், முன்னாள் இலங்கை எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பேசுகின்றனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு பியூசிஎல் தலைவர் சுரேஷ், பியூசிஎல் முன்னாள் தலைவர் கண்ணபிரான், முன்னாள் சண்டிகர் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ், புரட்சிகர எழுத்தாளர் சங்க கவிஞர் வரவர ராவ், அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் கிலானி, காஷ்மீர் அனைத்து கட்சி {ஹரியத் குழு சையத் அலிஷா கிலானி ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
உலக சீக்கிய செய்திகள் ஆசிரியர் ஜக்மோகன் சிங், அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா, மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கு கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினை டெல்லி அரசாங்கமே நடாத்தி முடித்தது என புலிகள் தரப்பினரால் குசுகுசுப்புக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் போர்க்குற்றம் தொடர்பாக மாநாடுவேறு இந்தியா நாடாத்துக்கின்றது எனவும் இந்நியாவின் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும் செயற்பாடுகளில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment