முஷாரப் மீதான ஐ.நா வின் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கு முஷாரப் ஆட்சியில் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறியதுதான் காரணம் என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாற்றியிருந்த நிலையில், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் கிடைத்தால்தான் முஷாரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பெனாசிர் படுகொலை குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிப்படையாக இருப்பதால் அதனை பாகிஸ்தான் அரசு வரவேற்பதாக கூறினார்.
"பெனாசிரை கொன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். அரசின் முயற்சியும் அதுவேதான் என்பதால், நிச்சயம் அது நிறைவேற்றப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment