சிறைச்சாலையிலிருந்து மேலுமொருவர் பாராளுமன்று செல்ல அனுமதி.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு பாராளுன்றுக்கு தெரிவாகியுள்ள பாலித தேவாரப்பெரும என்பர் நாளை கூடவுள்ள ஏழாவது பாராளுமன்றின் முதல் அமர்வில் கலந்து கொண்டு சத்தியப்பிரமானம் செய்து கொள்வார் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்துகம பிரதேச அமைப்பாளரான இவர் மத்துகம மஜிஸ்ரேட் சமிந்த வட்டுகொட்டபிட்டிய வின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 3 திகதி வரை விளக்க மறியலில் வைக்கபபட்டுள்ளதுடன், பாராளுமன்றின் முதல் அமர்வில் கலந்து கொள்வதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. இவரை பாராளுமன்றுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை சிறைக்சாலை நிர்வாகத்தினர் மேற்கொள்வர்.
தடுப்புக்காவலில் இருந்து இம்முறை பாராளுமன்றின் முதல் அமர்விற்கு இரு உறுப்பினர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment