அமைச்சரவை தெரிவு செய்வது தொடர்பில் ஜனதிபதி மந்திராலோசனை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 'மஹிந்த சிந்தனை இதிரி தெக்கம' (“Mahinda Chinthana Idiri Dekma”) வில் குறிப்பிட்டுள்ளது போல் அமைச்சவையை தெரிவு செய்ய இன்று பிற்பகல் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க , நிதியமைச்சின் செயலர் பி.வி. ஜேயசுந்தர, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியயோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது. அமையவுள்ள அமைச்சரவை மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்டதாகவே அமையும் என முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment