பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு அனுமதி கேட்டு பாதுகாப்பு செயலருக்கு கடிதம்.
ஜனநாயக தேசிய முன்னணி ஊடாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி, இராணுவத் தடுப்புக் காவலில் இருந்து எதிர்வரும் 22ம் திகதி பாராளுமன்று சென்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதிள்ளாதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க கித்துலகொட தெரிவித்துள்ளார்.
ஜெனரல் பொன்சேகா பாராளுமன்றில் பிரசன்னமாகி பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடித்தின் பிரதி ஒன்றினையும் கித்துல்கொட அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment