Sunday, April 4, 2010

நித்தியானந்தா சீடர் லெனினின் பரபரப்பு வாக்குமூலம்

சாமியார் நித்யானந்தா சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசிடம் தமிழக போலீஸ் ஒப்படைத்து விட்டது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நித்யானந்தா வீடியோ வெளியான பின்பு முதல் முறையாக லெனினிடம் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதுபற்றி லெனின் கூறியதாவது:-

சாமியார் நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் நான் பணிபுரிந்தேன். அப்போது நித்யானந்தா தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனால் அவரது தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.

எனவே சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை. அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.

முழு சி.டி.யை கர்நாடக போலீசிடம் ஒப்படைத்து இருக்கிறேன். வீடியோ எடுக்க உதவியவர்களை வெளியிட மாட்டேன். அவர்கள் உதவியதால் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். இதில் என் பங்கு அவ்வளவுதான். நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன்.

ஆசிரமத்தில் உள்ள மேலும் 2 பெண்கள் நித்யானந்தா பற்றி என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார். ஒரு ஆணும், பெண்ணும் நித்யானந்தா பற்றி என்னிடம் தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு தான் நித்யானந்தா பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் இன்னும் ஆசிரமத்தில் உள்ளார். அவர் நித்யானந்தாவுக்கு எதிராக முறைப்படி புகார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு லெனின் கூறி யுள்ளார். (டிஎன்எஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com