ஜெனரல் நாளை பாராளுமன்றம் செல்ல அனுமதி.
இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்களை கொலை செய்ய முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா ஜனநாயக தேசிய முன்னணி ஊடாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்று தெரிவாகியுள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரை நாளை பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் பொன்சேகா பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதில் எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாளை விசேட பாதுகாப்புடன் பாராளுமன்று கொண்டு செல்லப்படவுள்ள ஜெனரல் பொன்சேகா பாராளுமன்றில் தனது கன்னிப்பேச்சை நிகழ்த்தவுள்ளார். அவரது பேச்சு நாளை உள்நாட்டு மற்றம் சர்வதேச இராஜதந்திர மட்டங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment