பொன்சேகாவை விடுவிக்க கோரும் பிக்குகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்கின்றது.
இராணுவப் பொலிஸாரினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி புத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். "நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த ஜெனரலை உடனடியாக விடுதலை செய்" என நேற்று ஜேவிபியின் பின்னணியுடன் கொழும்பு கோட்டை பகுதியில் ஆரம்பமான உண்ணாவிரத் போராட்டம் கலந்து கொண்டுள்ள லுணகம்வெகர கல்லாயணரன்சி தேரர், அரசாங்கம் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக உறுதிமொழி வழங்கும்வரை சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் உண்ணாவிரம் இருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரம் பொது ஜனங்களின் நடமாட்டத்திற்கு ஊறு விளைவிப்பாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்து அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவை வேண்டினர். நீதிமன்று அதற்கான உத்தரவு வழங்கியதை அடுத்து அக்கூடாரம் பொலிஸாரால் அகற்றப்பட்டது. அத்துடன் அங்கு குழுமியிருந்த மக்களையும் அங்கிருந்த அகன்று செல்லுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment