ஜெயானந்தமூர்த்தியிடம் ஒரு கேள்வி : சிவராம் மாமனிதரா? மஹிந்த யதார்த்தவாதியா? பீமன்.
இலங்கையில் ஊடகசுத்திரத்தினை சாதனமாக பயன்படுத்தி வடகிழக்கின் இளைஞர் யுவதிகளின் மனதில் இனவாத நஞ்சை ஊட்டிய அர்ப்ப மனிதர்களுள் ஒருவரான சிவராம் கொல்லப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாக கூறும் ஜெயானந்தமூர்த்தி, சிவராமின் நெருங்கிய நண்பன் என தன்னைக்கூறி அதனூடாக பிரபல்யம் மேடமுற்படுமளவுக்கு அரசியல் மூலதனமற்ற ஓட்டாண்டியாக நிற்கின்றார்.
சிவராம் அறிவாளி என்பதில் சந்தேகம் இல்லை. அவரிடம் ஆற்றல் இருந்தது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அந்த அறிவையும் ஆற்றலையும் சிவராம் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு பயன் படுத்தினாரா? என்ற கேள்வி உண்டு. சிவராம் வாழ்நாளில் பிரபாகரனுக்கு துதிபாடிய சிலநாட்கள் மாத்திரமே ஜெயானந்தமூர்த்திக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிவராம் ஓர் ஊடகவியலாளனாக வழர்ச்சி பெறுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் யார் வழங்கினார்கள்? ஏதற்காக வழங்கினார்கள் என்பதை ஜெயானந்தமூர்த்தி தெரிந்திருக்க வாய்பில்லை.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அடக்கப்படும் ஒரு சமுதாயத்தின் மீட்சிக்காகவும் குரல்கொடுத்த எத்தனையோ பெருபாண்மையின ஊடகவியலாளர்களும், மனிதநேயர்களுமே சிவராம் ஒரு சிறந்த ஊடகவியலாளராக வழர்வதற்கு ஒத்தாசை வழங்கியிருந்தனர். ஆனால் அப்பேர்ப்பட்ட உயரிய குணம் படைத்த மனிதர்களின் சிறந்த சிந்தனைகளை இருட்டறைகளில் பூட்டிய சிவராம் வாழ்நாளில் செய்தது யாவும், இனவாதத்தை தூண்டி, பிரபாகரனின் கொலைவெறிக்கு சமரம் வீசியதேயாகும்.
தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கட்டுரைகளை எழுத நன்கு பயிற்றப்பட்டிருந்த சிவராம், ஆங்கில மொழியில் சதோதர இன எழுத்தாளர்களால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைக்கான தீர்வுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு ஆக்கத்தை தன்னும் தனது வாழ்நாளில் தமிழிற்கு மொழி பெயர்த்து சிங்களவர்களிடையேயும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வல்லவர்கள் உண்டு என்ற விடயத்தை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தி இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றாரா? மாறாக புலிகளின் கருத்துக்களை நியாயப்படுத்தி ஒட்டு மொத்த சிங்கள மக்களையும் தமிழ் இளைஞர் யுவதிகள் வெறுக்குமளவிற்கு இனவாதத்தை விதைத்தார்.
பிரபாகரன் மக்களை கப்பம்வாங்கி வாட்டியபோது,
வானம் பொழிகிறது, பூமி விளைகிறது,
"வரி....வட்டி....கிஸ்தி".
யாரைக்கேட்கிறாய் வரி!
எதற்கு கேட்கிறாய் வரி!
எங்களோடு வயலுக்கு வந்தாயா!
நாற்று நட்டாயா!
களை பறித்தாயா!
ஏற்றம் இறைத்து நெடு வயல் பாயக்கண்டாயா!
அங்கே கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா!
அல்லது மாமனா மச்சானா!'
என்று பிரபாகரனை சிவராம் தனது ஒரு கட்டுரையில் தன்னும் கேட்டிருந்தால் சிவராமை சிறந்த எழுத்தாளன் அல்லது ஊடகவியலாளர் என்றிருப்பேன்.
தமிழீழம் என்ற இலக்கிற்காக கஞ்சிகுடிச்சாற்றில் இருந்து வன்னிக்காட்டிற்கு கால்நடையாக நடந்து முறிந்த, மக்களை நேசித்த எத்தனையோ இளம் போராளிகள் இன்னும் உயிர்வாழ்கையில் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டு அமைதி மிகுந்த சூழலில் மட்டகளப்பிலிருந்து வன்னிக்கு மோட்டார் கைகிள் ஒடியது ஒர் சாதனை எனக் கூறுகின்றீர்கள். இது ஒன்றும் உங்கள் குற்றமல்ல, கடந்த 5 ஆண்டு பாராளுமன்ற சேவைக்காலத்தில் மக்களுக்கு சேவை செய்திருந்தால் இந்த வங்கிரோத்து வந்திருக்காது. மக்கள் வழங்கிய ஆணைக்காலம் முடிந்துள்ள நிலையில் நான் மக்களுக்கு இவ்வளவு செய்துள்ளேன் எனக் கூறுவதற்கு எதுமில்லாமல், சிவராமை எனது வீட்டில் கொண்டுபோய் படுக்கவைத்தேன், வன்னியில் 10 நாள் தவம் கிடத்து பிரபாகரனைப் பார்த்தேன் என வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளதை பார்க்கும்போது நகைச்சுவையாகவுள்ளது.
அத்துடன் தாங்கள் காலம் கடந்தாவது இத்தனை காலமும் மறைக்கப்பட்ட உண்மை ஒன்றை வெளிப்படையாக கூறியதையிட்டு மகிழ்சி. யாnனில், தங்களை பாராளுமன்றத்துக்கு மக்கள் தெரிவு செய்யவில்லை. என்னை சிவராமே எம்பி ஆக்கினார் (என்னை சிவராமூ எம்பீ ஆக்கினாரு) என்ற உண்மையை காலம் கடந்தாவது கூறியுள்ளீர்கள்.
இப்போது விடயத்திற்கு வருவோம். உங்கள் பாசையில் சிவராம் பற்றி கூறுவதானால் கூறிகொண்டே போகலாம். (அவர் உட்படுகொலைகள், சகோதர இயக்க மோதல்களுக்கு எவ்வாறு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார் என்பது முதல்) பிரபாகரனை துதிபாடியமைக்காக அவருக்கு மாமனிதர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஆனால் பிரபாகரனால் வழங்கப்பட்ட இந்த மாவீரர் என்ற பட்டம் செல்லுபடியானதாயின் ' ரணில் எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றார்' ஆனால் சந்திரிகா பாராளுமன்றை கலைத்துவிட்டார் எனவும் மஹிந்த ஓர் 'யதார்த்தவாதி' எனவும் பிரபாகரன் திருவாய்மலர்ந்தருளிய விடயங்களையும் பொன்னெழுத்துக்களில் பொறித்து வையுங்கள், வரலாற்றுக்கு பதில் சொல்லவேண்டிய தேவைவரும.;
மேலும் இத்துடன் சிறியதோர் வேண்டுதலையும் விடுத்து முடிக்கின்றன். உங்களை சிவராம் எம்பி ஆக்கினவர். ஆனால் நீங்கள் பாராளுமன்றம் போனது மக்களின் வாக்குகளால். அப்பாராளுமன்ற உறுப்பினர் பதவியால் உங்களுக்கு லண்டனில அரசியல் தஞ்சத்தோட சேர்ந்த சுகபோக வாழ்வு. அதுக்கும் மேலாக இலங்கையில் எம்பிக்களுக்கான ஓய்வூதியம். அதேநேரம் உங்களுக்கு வாக்களித்த பெண்களில் பலர் விதவைகளாக அன்றாட சாப்பாட்டுக்கும் கஷ்டப்படுறாங்கள். உங்கட பென்சன் காசு மட்டக்களப்புல இருக்கிற 5 விதவைக்குடும்பங்கள் வாழுறத்துக்கு தாராளமா போதும். எனவே அந்த பென்சன் பணத்தை தன்னும் மட்டக்களப்புல உள்ள 5 விதவைகளுக்கு வழங்குமாறு ஒரு ஸ்ரேண்டிங் ஓடர் கொடுக்க முடியுமா? VIII
நன்றி பீமன்
veeman@ilankainet.com
1 comments :
sivaram is traitor to tamils like pirabakaran,jeya also.
Post a Comment