விண்ணில் பிறந்தநாள் கொண்டாடும் விண்வெளி வீரர்கள்
விண்ணில் மிதந்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று தங்களின் பிறந்தநாளை விண்வெளியில் இருந்தபடியே கொண்டாடுகின்றனர். விண்வெளி ஆய்வு வரலாற்றிலேயே, இரண்டு பேர் ஒன்றாக விண்ணில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு முதல்முறையாக இவர்களுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இருவரில் ஒருவர் முன்னாள் ரஷ்ய போஸ்காரரும், தற்போதைய விண்வெளி ஆய்வாளருமான மிக்கெய்ல் கோர்னியென்கோ. மற்றொருவர் ஜப்பான் விண்வெளி ஆய்வாளர் சொய்ச்சி நொகூச்சி.
ஏப்ரல் 15ம் தேதியான இன்று மிக்கெய்ல் 50வது பிறந்தநாளையும், சொய்ச்சி 45வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். வழக்கமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பீர் உள்ளிட்ட மதுபான சமாச்சாரங்களுக்கு வாய்ப்பில்லை. பெரியளவில் கேக் வெட்டியும் கொண்டாட முடியாது.
எனவே டெஸ்ட் ட்யூப் போன்ற ஒரு மெல்லிய குடுவையில் ஜூஸ் குடித்து இந்த இவர்கள் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள்.
0 comments :
Post a Comment