அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்க வேண்டும்
இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அமெரிக்கவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நேற்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காப்பதில் அரசாங்கம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மக்களும் ஒன்றிணைந்த ஒரே இலங்கைக்குள் சமாதானமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையானது நாட்டில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புகளில் பங்கெடுத்து, சிறந்த தோழமை நாடாக செயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
0 comments :
Post a Comment