ஆயுதக் குழுக்களால் மக்களுக்கு அச்சுறுத்தல். ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்
2010-04-01
மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி
ஆலரி மாளிகை
கொழும்பு – 03
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு
ஆயுதக்குழுக்களால் மக்களுக்கேற்படும் அச்சுறுத்தல்.
நம்மத்தியில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடம் உள்ள ஆயுதங்களைக்களையுமாறும் அவர்கள் விரும்பினால் அரச பாதுகாப்பினை வழங்களாலாம் எனவும் தங்களுக்குப் பலதடவை கோரியிருந்தேன். என்னால் பல தடவைகளும் பொதுமக்களால் இதிலும் கூடிய தடவைகள் கோரிக்கைகள் விடப்பட்டபோதிலும் அதைச் செய்வதில் அரசு ஏன் தயக்கம்
காட்டுகிறது என எனக்கு விளங்கவில்லை. ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருப்பின் பல உயிரும் அரசின் நற்பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இரு வாரங்களுக்கு முன் கப்பம் கேட்டு கடத்தப்பட்ட 17 வயது மாணவன் ஒருவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்hட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். எனது கவலை போதிய சாட்சியின்றி முன்பு குற்றவாளிகள் தப்பியது போல இந்த விடயங்களில் தப்பவிடக்கூடாதென்யதே.
தயவு செய்து முறைதவறி ஆயுதம் வைத்திருப்போரின் ஆயுதங்களை உடனடியாக களைவீர்களேயானால் எவ்விதபயமின்றி சாட்சிகள் முன்வந்து சாட்சியளிக்க உதவும். முரண்படுபவர்களுடன் மோதவோ பயப்படவோ வேண்டியதில்லை.
நன்றி
அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
0 comments :
Post a Comment