பிரிட்டன் தேர்தல்: தீர்மானிக்கும் சக்தியாக இந்துக்களின் வாக்குகள்
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில், சில குறிப்பிட்ட இடங்களில் அங்குள்ள இந்துக்களின் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் 6 ஆம் தேதியன்று பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு நாடாளுமன்றமே ஏற்படும் என்றும் பிரிட்டன் அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகின்றனர்.
இநந்நிலையில், பிரிட்டனில் சுமார் 7,50,000 இந்துக்கள் வசிக்கின்றனர். இதில் இந்துக்கள் பெருமளவு வசிக்கும் சில குறிப்பிட்ட இடங்களில், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வதாக லண்டன் 'இந்து அமைப்பு' தெரிவித்துள்ளது.
குறிப்பாக லண்டன் புறநகர் பகுதிகள்,தென் கிழக்கு பகுதிகள், லியிசெஸ்டர், மேற்கு மிட்லேண்ட்ஸ், கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷைர் ஆகிய இடங்களில் இந்துக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment