இலங்கையில் போர்க்குற்றம் : விசாரணைக் குழுவுக்கான ஆட்கள் தெரிவு .
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவில் இடம்பெறக்கூடிய நபர்களை அடையாளம் காணும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா. செயலர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போரின் இறுதி நாட்களின்போது நடந்தத மனித உரிமை மீறல்கள் குறித்தும், இலங்கை தொடர்பான மற்ற விடயங்கள் குறித்தும் இந்த நிபுணர் குழு ஆலோசனை வழங்குவார்கள்.
ஐ.நா.மன்றத்தில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார் அவர் .
ஐ.நா. மன்றத்திற்கான இலங்கை தூதரை ஐ.நா. அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி சந்தித்து பேசிவருகிறார்.அவர்கள் இருவரும் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காண்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஐ.நா. மன்றத்தின் அதிகாரி லின் பாஸ்கோ விரைவில் இலங்கைக்கு சென்று அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும் நான் எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் கூறினார்.
பான் கி மூனின் இந்தப் பேட்டிக்குப் பின்னர், ஐ.நா. தலைமை நிர்வாகி விஜய் நம்பியாரும், ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் பாலித கோஹன்னவும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment