கருணா அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்பு : பிள்ளையான் இந்தியா பயணம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் எம்.பி யான வினாயகமூர்த்தி முரளிதரன் மீள் குடியேற்ற பிரதி அமைச்சராக இன்று அமைச்சில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம் குறிப்பிட்ட அமைச்சின் அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ அவர்களும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அதே நேரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் தனது கட்சியின் நிர்வாக உறுப்பினர்களுடன் இந்தியா சென்று இந்திய உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிகார அமைச்சின் செயலாளர் நிருபாமா ராவ் அவர்களின் விடுத்த அழைப்பை ஏற்றே தாம் அங்கு செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment