நோர்வே புளொட் கிளையின் பொறுப்பாளர் வன்னயில் தேர்தல் பிரச்சாரங்களில்.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் நோர்வே கிளையின் பொறுப்பாளர் ராஜன் ஆகியோர் இன்றுமாலை பெரியார்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் பெரியார்குளத்தில் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமொன்றிலும் நோர்வே புளொட் கிளை பொறுப்பாளர் ராஜன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட் முக்கியஸ்தர்கள் உரையாற்றினர்.
அங்கு பேசிய அவர்கள் கட்சியின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பணிகள் தொடர்பில் எடுத்து விளக்கியதுடன், கட்சியின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் பூரண ஆதரவு தேவையென்றும், இதற்காக நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
0 comments :
Post a Comment