உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிக்குகளை அள்ளிச் சென்ற பொலிஸார்.
"நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த ஜெனரலை உடனடியாக விடுதலை செய்" எனும் கோஷத்துடன் சாகுவரை உண்ணா விரதத்தை மேற்கொண்டிருந்த பிக்குகளை இரு பஸ்களில் சிவில் உடையில் வந்த பொலிஸார் அள்ளிச் சென்றுள்ளனர். பொது இடங்களில் மக்களின் இயல்பு வாழ்விற்கு குந்தகம் ஏற்படுத்துவதாக நீதிமன்றிற்கு தெரிவித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பொலிஸார் மேற்படி உண்ணாவிரதத்தை இடைநிறுத்தியதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது.
ஆனால் பிக்குகள் மிகவும் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி சார்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் கடத்தப்பட்டுள்ள பிக்குகள் எங்கிருக்கின்றார்கள் என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் இல்லை எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது. பஸ்களில் ஏற்றப்பட்ட பிக்குகளில் ஒருவர் பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டபோது அவருக்கு கன்னத்தில் அறையப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment