புத்தளம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணின் உள்வீட்டு மோதல் காரணமாக புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 19 வயது இளைஞனின் கொலை தொடர்பாக பொலிஸார் பாராபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட 19 வயது இளைஞன் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ள வேட்பாளரான முன்னாள் அமைச்சர் தசநாயக்கவின் மனைவி இந்திராணி தசநாயக்கவின் தீவிர ஆதரவாளரும் அவருக்கான பிரச்சார பணிகளில் முன்நின்றவருமாகும்.
இளைஞர் புத்தளம் மாவட்டத்தில் அரசு சார்பில் போட்டிட்டு வெற்றியீட்டியுள்ள பா.உ பிரயங்கர ஜெயரத்தினவின் ஆதரவாளர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆர்பாடக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினருக்கு எதிரான சுலொகங்களை தாங்கி நிற்பதாக தெரியவருகின்றது.
அதே நேரம் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபரின் வீடு பிரதேச மக்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
0 comments :
Post a Comment