குருநாகலில் ஐ.தே.மு வேட்பாளரின் வாகனம் அடித்து நொருக்கப்பட்டது.
குருநாகலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்று கொண்டிருந்த வாகனத் தொடரணி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் அகிலவிராஜ் காரியவாசத்தின் வாகனம் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment