மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்.
ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரு குழுக்கள் சற்று முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நாவலப்பிட்டியிலுள்ள ஹட்ரி மற்றும் கட்டபுல ஆகிய பகுதிகளிலேயே இந்த இரு குழுக்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இத்தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர். வான்னொன்றும், 3 முச்சக்கரவண்டிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு மனோ கணேசன் விரைந்துள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment