Thursday, April 22, 2010

அநீதிக்கு பலியாக்கப்பட்ட சாட்சியாக நான் உங்கள் முன்நிற்கின்றேன். ஜெனரல் பொன்சேகா.

ஏழாவது பாராளுமன்றும் இன்று கூடியபோது இராணுவத் தடுப்புக் காவலிலிருந்து விசேட பாதுகாப்புடன் பாராளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா அநீதிக்கு பலியாக்கப்பட்டதற்கு சாட்சியாக உங்கள் முன்நிற்பதில் எனக்கு மகிழ்சியே எனவும் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தனது பாராளுன்ற கன்னிப்பேச்சின் போது தெரிவித்துள்ளார்.

துவக்க நாள் உரையில் அவர் பேசியுள்ளதாவது.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே,

நாட்டின் 7 வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தாங்கள் நியமிக்கப்பட்டதற்கு என கட்சியின் சர்ர்பாக இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகராக தங்கள் பணிகளை மிகவும் வெற்றிகரமான முறையில் தொடர்வதற்கும் என் வாழ்த்துக்கள். நாடு நெருக்கடியான கால கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்கள் பணி உண்மையில் மிகவும் அவசியமானது. யாருக்கும் பாரபட்சமின்றி தாய்நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தங்கள் கடமைகளை செய்வீர்கள் என நம்புகிறேன். இந்த கடினமான பணியை செய்வதற்கான பலம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பாராளுமன்ற கலாச்சாரத்திற்கும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் உட்பட்டு உங்கள் பணிகள் தொடருமென நாங்கள் நம்புகிறோம்.

ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கான பாதுகாப்பு பாராளுமன்றத்தில் இருந்து தான் துவங்க வேண்டும். நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, அனைவருக்கும் சமமான நீதி, அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க செய்தல், அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் மற்றும் சுதந்திரம் போன்ற ஜனநாயக அடிப்படை கோட்பாடுகளுக்கு பாதுகாப்பளிக்கும் சிறந்த தலைவராக செயல்படுவீர்கள் என நம்புகிறோம்.

நாட்டில் தற்போது இருக்கும் நிலையில் மக்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டில் நீதியை நிலைநாட்டவும் பேச்சு , எண்ணம் , செயல் ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கு பாதுகாப்பளிக்கும் வகையிலும் அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டமைப்புக்களுக்கான உரிமைகள் மற்றும் மக்கள் தாங்கள் சட்டத்திற்கு புறம்பான வகையிலே காவலில் வைக்கப்படுதல், சிறையிலடைக்கப்படுதல் ஆகியவற்றிற்கான உரிமைகளையும் பேணிக் காக்கும் சரியான வகையிலே பாராளுமன்றத்தை வழிநடத்துவீர்கள் என நம்புகிறோம்.

அநீதிக்கு பலியாக்கப்பட்டதற்கு சாட்சியாக நான் உங்கள் முன் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. மக்களால் பாராளுமன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற முறையில் உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். உங்கள் அனைவரின் முன்னும் இவ்வாறு பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த ராஜபக்சே அரசின் பிரதிநிதிகள் அனைவருக்கும் என் நன்றி.

நாட்டிற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் செய்யப்படும் எந்த பணிகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம் எனபதையும் உங்களிடம் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துவதுடன் அலுவலக பணிகளில் தங்களுக்கும் பிரதமருக்கும் ஒத்துழைப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிலங்க மக்கள் அனைவரும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தி இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

பாராளுமன்று சென்றிருந்த ஜெனரல் பொன்சேகாவிற்கு அரச தரப்பு பல பாராளுன்ற உறுப்பினர்களும் தமது பாராட்டுதலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக புதிய பிரதமர், பா.உ பௌசி போன்றோர் வெளிப்படையாகவே அவரிடம் சென்று தமது வாழ்துக்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் பாராளுமன்றின் உத்தியோகித்தர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் சிலர் தாம் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தமைக்காக நாளை தண்டிக்கப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.

அதே நேரம் இடைவேளையில் ஜெனரல் பொன்சேகா தனது சகாக்களுடன் பாராளுமன்ற சிற்றுண்டிசாலையில் தங்கியிருந்தபோது, பா.உ டலஸ் அலகப்பெரும அதே மேசையில் சென்று அமர்ந்து கொண்டதாகவும் அவர்கள் பேசுவதை மிகவும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாகவும் இது ஒர் அரசியல நாகரிகமற்ற செயல் எனவும் ஜேவிபி சார்பு இணையம் ஒன்று தெரிவிக்கின்றது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com