இந்திய இலங்கை கடற்படையினர் திருமலையில் கூட்டுப்பயிற்சி
இலங்கை கடற்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை அளிப்பதற்காக இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் மஹார் கப்பல்இ எதிரும் 14ம் திகதி திருமலைத் துறைமுகத்திற்கு வர உள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வரும் இந்த கப்பல்இ இலங்கையில் 6 நாட்கள் தங்கி இருந்து இலங்கை கடற்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கவுள்ளது.
இந்திய கடற்படையினருக்குஇ இலங்கை கடற்படையின் சிறப்பு விரைவுவேக தாக்குதல் படகு பிரிவினர் தமது பயிற்சி ஒத்திகைகளை செய்து காண்பிக்கவுள்ளனர். இந்திய கடற்படை கப்பலுடன் இணைந்து இலங்கை கடற்படையினரின் கப்பலும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
ஐ.என்.எஸ் மஹார் கப்பலில் 140 கடற்படையினர் பணியாற்றுவதுடன்இ கவசவாகனங்கள் சகிதம் 500 படையினரை ஏற்றிச் செல்ல வல்லது. 1987 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த கப்பலில்இ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தீயணைத்தல் இ தொலைத்தொடர்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக பயிற்சிகளை மேற்கொள்வர் என தெரியவருகின்றது.
1 comments :
Thank you india for helping us destroying the terrorism in our mother land.
Post a Comment