Thursday, April 1, 2010

“ஆபரேசன் பவான்" திட்டம் வகுத்து கொடுத்த வி.கே.சிங் தளபதியாக பதவி ஏற்கிறார்.

ஈழத்தில் "ஆபரேசன் பவான்" (Operation Pawan) என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க சிறந்த முறையில் திட்டம் வகுத்து கொடுத்து அப் போர் வெற்றிக்காக "யுத்சேனா" (Yudh Sena)என்ற பதக்கம் பெற்ற வி.கே.சிங் இந்திய இராணுவ தலைமை தளபதியாக பதவி (Chief of Army Staff - COAS) ஏற்கிறார்.

இந்திய இராணுவத்தில் இதுவரை 25 பேர் தலைமை தளபதியாக பதவி வகித்துள்ள நிலையில் இதுவரை இந்திய இராணுவ தலைமை தளபதியாக இருந்த தீபக்கபூர் ஓய்வு பெறும் நிலையில் கிழக்கு மண்டல இராணுவ தளபதியாக இருந்த 59 வயதாகும் வி.கே.சிங் 26-வது புதிய இந்திய இராணுவ தலைமை தளபதியாக பதவி ஏற்கும் இவர் 2 ஆண்டுகளுக்கு 1.13 மில்லியன் இராணுவத்தினரை தலைமை தாங்கி தலைமைத் தளபதி பதவியில் இருப்பார்.

எதிரிகளை தாக்கி அழிக்க வியூகம் வகுப்பதில் வல்லவரான இவர் ஈழத்தில் மட்டுமல்ல காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடந்த தீவிரவாதிகள் மீதான பல்வேறு தாக்குதலை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.

இவரைப் பற்றி மேலும் அறியப்படுவது, எதிரிகளை தாக்கி அழிக்க வியூகம் வகுப்பதில் வல்லவர். கமாண்டோ என்ற அதிரடி தாக்குதலில் தலைசிறந்த பயிற்சி பெற்றவர்.1970ம் ஆண்டு ஜூன் மாதம் இராஜ்புத் படைப் பிரிவில் (Rajput Regiment) இணைந்தார்.(இராஜ்புத் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தலைமைத் தளபதி பதவிக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்)வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு கல்லூரியிலும் (the Mhow-based Army War College and the US Army War College, Carlisle), அமெரிக்காவில் உள்ள இராணுவ போர் கல்லூரியிலும் போர்ட் பென்னிங்கில் ரேஞ்சர்ஸ் கோர்ஸையும் (Rangers Course) முடித்து பட்டம் பெற்றுள்ளார். (graduate of the US Army Infantry School at Fort Benning ,Georgia in the USin the US)1971ம் ஆண்டு நடந்த வங்கதேசப் போரின்போது இவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

தீவிரவாத ஒழிப்புப் பணிகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர், இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.இலங்கை போர் நடந்த நேரத்தில் சென்ற அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் இராணுவ கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ தலைமை பொறுப்பு வகித்தவர். மேற்குவங்ம் டார்ஜீலிங்கில் இராணுவ நிலம் முறைகேடாக விற்கப்பட்டது தொடர்பாக இராணுவ நில மோசடி விவகாரத்தில் இராணுவ மேஜர் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் உட்பட 4 அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்தவர் உத்தரவிட்டவர். கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது பாகிஸ்தான் மீது படையெடுப்பதற்காக ஆபரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. அதை ஒருங்கிணைத்து நடத்தியவர்.

மேலும் இவர் புதிதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்று அளித்துள்ள முதல் பேட்டியில்,சீனாவிடம் இருந்து எந்தவொரு மிரட்டல் வந்தாலும் அதனை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என்றும், "நமது ராணுவத்தின் உள்கட்டமைப்பு ஆரோக்கியம் பேணிக்காத்திட முக்கியத்துவம் அளிப்பேன். இது சரியாக இருந்தால் தான் நாம் வெளியில் இருந்து வரும் அச்சுறுதல்களை சமாளிக்க முடியும். ராணுவ துறையில் ஊழல்கள் இல்லாதவாறு முழுக்கவனம் செலுத்துவேன். ராணுவ துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கப்பட்டு மேலும் நவீனப்படுத்தப்படும். இந்தியா பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. நமது ராணுவம் எதையும் சமாளிக்கும். சீனா மற்றும் வெளி நாட்டு அச்சுறுதல்கள் எதுவாக இருந்தாலும் அதனை சந்திக்க தயார்". இவ்வாறு அவர் கூறினார்.

நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பேர்போன வி. கே.சிங் பதவி ஏற்றதில் ராணுவ துறையில் அதிகாரிகள் சற்று கூடுதலாகவே நிமிர்ந்து நிற்கிறார்களாம்.

தகவல்: அலெக்ஸ் இரவி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com