மனிதாபிமான பணிகளுக்கு பிரிட்டன் மேலும் ஒருமில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவி
இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொடுப்பதற்காக பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவி வழங்கத்திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த பதினெட்டு மாதங்களில் சுமார் 12.5 மில்லியன் பவுண்ட்ஸ் உதவியை பிரிட்டன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிலக்கண்ணி வெடி அகற்றுதல், போக்குவரத்து வசதிகளை வழங்குதல், உணவு, குடிநீர் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டதாகவும், தற்போது வழங்கப்படும் ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் பணமும் இதே காரியங்களுக்காகவே செலவிடப்படும் எனவும் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment