பம்பலப்பிட்டி இந்து மாணவன் அகில இலங்கையில் முதலிடம்.
2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் (பம்பலப்பிட்டி) கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் சுசேந்திரலிங்கம் துவாகரன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
ஆகக் கூடுதலான புள்ளிகளுடன் எட்டு ஏ, ஒரு பி பெறுபேற்றைப் பெற்று துவாகரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் உயர் பாடசாலை மாணவி ஷோபனா ஸ்ரீ சூரியகாந்தன் இரண்டாமிடத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் தனபாலசிங்கம் தர்ஷன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். நான்காம், ஐந்தாம் இடத்தை முறையே இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி துலசி சர்வேஸ்வரன், கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவன் வரதராஜன் ரிஷிகேஷ் ஆகியோர் அடைந்துள்ளனர்.
எனினும் இவர்கள் இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அதேபோன்று ஆறாம், ஏழாம் இடங்களை யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி லக்ஷனா விஜயகுமாரன், திருகோணமலை ஆர். கே. எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் ரட்னகுமார் நீதன் ஆகியோர் சமமான புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்கள். கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் விஜயரட்ணம் விதுஷன் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். அதேபோன்று மூன்று மாணவர்கள் சமமான புள்ளிகளைப் பெற்று 9ஆம், 10ஆம் இடங்களுக்குத் தெரிவாகியுள்ளனர். மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி தேசிய பாடசாலையின் மோகனசுந்தரம் கீர்த்தன். கொழும்பு - 4, திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலையின் கேஷிகா குமாரதீஸன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விதுக்ஷா மகேந்திரராஜா ஆகியோர் சமமான புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
1 comments :
இனி யாவது படித்த சமூகம் வரட்டும்.
Post a Comment