Wednesday, April 14, 2010

சந்திரநேரு சந்திரகாந்தனால் பியசேனவிற்கு உயிர் அச்சுறுத்தல். பீமன்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனங்களைப் பெற்றது. அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரான பியசேன பாராளுமன்ற பிரதிதித்துவத்தை பெற்றுக்கொண்டார். அகில இலங்கை தமிழ் கட்சி் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுபாராளுமன்றிற்கு தெரிவாகியுள்ள பியசேனவிற்கு சகவேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தனால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஆசனத்தை எவ்வகையிலேனும் பெற்றுக்கொள்வதற்காக சந்திரகாந்தன் பல்வேறுபட்ட குறுக்கு வழிகளைத்தேடிவருவதாக தெரியவருகின்றது. அதனடிப்படையில் பியசேனவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது ஆதரவாளர்கள் பலரும் அச்சம்கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானபோது சிங்களவன் ஒருவனுக்கு தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்குகளை அளிக்க கூடாது என விசமப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட சந்திரநேரு சந்திரகாந்தன் பியசேன தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவரை பதவி விலகக் செய்து அல்லது சந்தியப்பிரமாணம் செய்வதைத் தடுத்து பதவியைக் கைப்பற்றிக்கொள்ள முயல்வதாக நம்பப்படுகின்றது.

விருப்புவாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ள சந்திரகாந்தன் பியசேனவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி பாராளுமன்றம் செல்லமுயல்வதாக பியசேனவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பியசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரகாந்தன், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் எதிரிகளாக செயற்பட்டுவந்த பிள்ளையானின் சகாவான சீலன் என்பவரும், இனியபாரதியும் பகைமைகளை மறந்து மீண்டும் இணைந்துள்ளதாகவும், இவ்விடயம் தனக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பியசேனவின் உயிருக்கு இனியபாரதி , சீலன் குழுவினரால் ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தேகம் சந்திரகாந்தனுக்கு எவ்வாறு உருவானது? இவரே பியசேனவை கொலைசெய்து விட்டு பாரதி , சீலனின் தலையில் சுமையை போட எத்தனிக்கின்றார் என பியசேனவின் ஆதரவாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மறுபுறத்தில் சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவரும் உறவினருமான பெண் ஒருவர் பியசேனவை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட எம்பி பதவியானது மிகவும் அச்சுறுத்தலானது எனவும், அவற்றை எதிர்கொள்ளக்கூடிய தகமை சந்திரகாந்தனுக்கே உண்டு எனவும் தெரிவித்து, பதவியை சந்திரகாந்தனுக்கு விட்டுக்கொடுத்தால் வேண்டிய தொகைப் பணம் தரப்படும் எனவும் கூறியுள்ளார். இவை எவற்றையும் பொருட்டுத்தாதவராக பியசேனவின் பயணம் தொடர்வதாகவும் அவருக்கு தற்போது இரு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரியவருகின்றது.

அதே நேரம் சந்திரகாந்தனுக்கு எம்எஸ்டி ஐ சேர்ந்த ஐவர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஓய்வு பெற்ற எம்பிக்கள் எவருக்கும் வழங்கப்படாத விசேட பாதுகாப்பு சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளமை பல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

தேர்தல் பிரச்சாரகாலங்களில் பியசேனவை அணுகிய சந்திரகாந்தன் தனக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் உள்ள நெருங்கிய தொடர்புகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியுடன் நிற்கும் படங்களை தனது கையடக்க தொலைபேசியில் காண்பித்து பியசேனவிற்கு ஒருவிதமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார். இவை எவற்றுக்கும் மசியாத பியசேன தான் கொண்ட கொள்கையில் உறுதியுடன் முன்னேறி வெற்றி கண்டுள்ளார்.

சந்திரநேரு சந்திரகாந்தனின் மேற்படி செய்பாடுகளுக்கு எதிராக அகில இலங்கை தமிழ் கட்சி ன் தலைமை எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக எவ்வித தகவல்களும் இல்லாத அதேநேரம், கட்சியின் தலைமையும் சந்திரகாந்தனின் இச்செய்பாடுகளுக்கு உடந்தையாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். பதவிகளுக்காக மக்களின் அபிலாசைகளை, மக்களின் விருப்பு வெறுப்பை, உணர்வை நிராகரிக்கும் செயற்பாடுகளை உடனடியாக தமிழரசுக் கட்சியின் தலைமை கைவிட்டு சந்திரகாந்தனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

தமிழ் தாய்க்கும் சிங்களத்தந்தைக்கும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 1961ம் ஆண்டு பிறந்த பியசேன இன்றுவரை அம்பாறை மாவட்ட மக்களுடன் வாழ்ந்து வந்திருக்கின்றார். சந்திரகாந்தன் மிகவும் சர்ச்சைக்கு பெயர்போன அரசில்வாதி ஒருவரின் மகன் என்பதுடன் கடந்த ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்றிராதவாறு அனைத்து வேட்பாளர்களும் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து மக்கள் தீர்ப்பை பெற்றுள்ளனர். அதனடிப்படையில் சந்திரகாந்தன் கடந்த 5 வருடகால பாராளுமன்ற பதவிக்காலத்தில் மக்களுக்கு தனது சேவையை செய்திருந்தால், இன்று மக்கள் அரசியல் பின்புலம் என்பது சூனியமான ஒருவரை ஏன் தெரிவு செய்திருக்கவேண்டும்?

அடுத்து இன்று அரசியல்வாதிகள் எனப்படுவோர் அனைவரதும் தேர்தல் பிரச்சார மூலப்பொருள் இனவாதமாகவே அமைந்துள்ளது. இவ்வினவாதமானது பியசேனவையும் விட்டுவைத்திருக்கவில்லை. சகவேட்பாளர்கள்கூட சிங்களவன் ஒருவனுக்கு விருப்புவாக்குகளை மக்கள் அளிக்க கூடாது எனக் பிரச்சாரம் செய்திருந்த நிலையில் மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் என்ன மடையர்களா? இவ்வாறே கடந்த 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போதும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட சந்திரகாந்தனின் தந்தையான சந்திரநேருவிற்கு போதிய விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றிராதபோது வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எதிராக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதி அவரை விலத்திவிட்டு தனக்கு அப்பதவி வேண்டும் எனக்கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பதவி ஆசைபிடித்து அலையும் நபர்கள் மக்களின் ஆதரவைப் பெற்று பதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே பொதுவான நியதியாகும். எனவே தமிழரசுக் கட்சியினர் பியசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை மக்கள் அங்கீகாரம் கிடைக்கும்வரை அமைசதிகாக்கமாறும், மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு கடின உழைப்பு மேற்கொள்ளுமாறும் வேண்டவேண்டும்.

2 comments :

tas957 April 15, 2010 at 10:42 AM  

before you publish any article the author shoul be make sure that there is mistake, anything wrong or not relavant to topic.

in Digamadulla distric no body selected by the Tamil Congress..

first paragraph of this article completly wrong.. thearticle says Podiappu piyasena selected by tamil congress.... but Podiappu piyasena and Chandrakanthan were contested by the ILLANKAI TAMIL ARASU KATCHI....

before you publish this kind of article you have to learn something about media..

thanks for now

Anonymous ,  April 15, 2010 at 1:04 PM  

Mr.Santhira kanthan Chandira Neru,MP did not work Properly for Sarath Fonseka during the last presidential election.He spent all the time in London with his family.His wife is a sinhalese and relative of Mahinda Rajapaksha.He shot his leg by himself in order to avoid election campaign for sarath Fonseka and told the media it was an accident.There was story that Mr.Neru,MP who mislead the LTTE peace delegation to surreder with white flag and shot down by the army at Mully Waikkal.How he managed to get a ticket to contest the election while other TNA MPs refused by Mr.Sampanthan.Mr.Neru is a British Permanent resident. Kumaran

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com